search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாமல்லபுரம் அருகே தாய்-மகளை கடத்தி பாலியல் தொந்தரவு- பள்ளி வேன் டிரைவர் கைது

    மாமல்லபுரம் அருகே மருத்துவமனைக்கு சென்ற தாய் மற்றும் 5 வயது மகளை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி வேன் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூர் பண்டிதமேடை சேர்ந்த ஒரு பெண் தனது 5 வயது மகளுடன் கடந்த 4-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது கணவர் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    விசாரணையில் மகள் வழக்கமாக செல்லும் பள்ளி வேனின் டிரைவரான மாமல்லபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் இருவரையும் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சரவணனின் மொபைல் போன் சிக்னலை வைத்து விசாரித்தனர். இதில் அவர் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்தனர்.

    தனிப்படை போலீசார் விரைந்து சென்று கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் சிறை வைக்கப்பட்டு இருந்த இருவரையும் மீட்டு சரவணனை கைது செய்தனர்.

    போலீசாரிடம் அப்பெண் கூறும்போது, ‘‘பூஞ்சேரியில் பஸ்காக காத்திருந்த எங்களை சரவணன் கடத்தி சென்று கன்னியாகுமரி லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினார். மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்’’ என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பாலியல் துன்புறுத்தல், ஆள் கடல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×