என் மலர்

  செய்திகள்

  சாலை மறியல்
  X
  சாலை மறியல்

  ஆதம்பாக்கத்தில் சுடுகாடு இடம் மூடப்பட்டதை கண்டித்து பொது மக்கள் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆதம்பாக்கத்தில் சுடுகாடு இடம் மூடப்பட்டதை கண்டித்து பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

  ஆலந்தூர்:

  ஆதம்பாக்கம் வானவம் பேட்டையில் வசிப்பவர் கள் முத்தியால் ரெட்டி தெருவில் உள்ள சுடு காட்டை பயன்படுத்தி வந்தனர்.

  இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த சுடுகாட்டை பயன்படுத்த தடை விதித்தும் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் மற்றும் கண்ணன் காலனியில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்த வேண்டும் என்று மாநக ராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து முத்தியால் ரெட்டி தெருவில் உள்ள சுடுகாடு மூடப்பட்டது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வானவம்பேட்டை பகுதி மக்கள் ஆலந்தூர் மண்டல சுகாதார ஆய்வாளர் வைரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு மனு கொடுத்தனர். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.

  இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 200 அடி சாலையில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  ஆதம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

  Next Story
  ×