என் மலர்
செய்திகள்

அத்தி வரதர்
காஞ்சீபுரம்: அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு
கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் :
108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஏராளமான பக்தர்கள் வருவதால் அத்திவரதரை தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, கூடுதலாக ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






