என் மலர்
செய்திகள்

விபத்து
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தண்ணீர் லாரி மோதி பெண் பலி
சித்தாலப்பாக்கத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
சோழிங்கநல்லூர்:
அடையாறு, ஜல்லடியன் பேட்டையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி உமா (வயது 47).
இன்று காலை கணவன் - மனைவி இருவரும் மாம்பாக்கத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே வந்த போது அவ்வழியே வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய உமா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் சுந்தரம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
போக்குவரத்து போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






