search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் மறவன் பட்டாம் பூச்சி
    X
    தமிழ் மறவன் பட்டாம் பூச்சி

    ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சிக்கு மாநில அந்தஸ்து - தமிழக அரசு உத்தரவு

    ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் சின்னங்களாக வரையாடு (விலங்கு), மரகதப்புறா (பறவை), காந்தள் (மலர்), பனை (மரம்), பலா (பழம்) ஆகியவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அந்த வரிசையில் மாநில பட்டாம்பூச்சியாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி சேர்க்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்களில் ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி இனமும் ஒன்று. இந்த பட்டாம்பூச்சிகள், கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் மஞ்சள் மற்றும் அடர்த்தியான காப்பி கலரில் இருக்கும். இதன் அறிவியல் பெயர் சிர்ரோசோர்ரா தையஸ் ஆகும்.

    தமிழக அரசு

    ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மாநில அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×