என் மலர்
செய்திகள்

பிளஸ்-1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை இவரது மகள் சத்யா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வை சத்யா எழுதினார்.
கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியானது அதில் சத்யா 369 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சத்யா தனது நண்பர்களிடம் கூறி வருத்தமடைந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை சத்யா மண்எண்ணையை உடலில் ஊற்றி தீகுளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சத்யா கருகி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.