என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் இருந்து சென்னை வந்த மாணவர் மாயம்
    X

    துபாயில் இருந்து சென்னை வந்த மாணவர் மாயம்

    துபாயில் இருந்து சென்னை வந்த மாணவர் மாயமானது குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    கேரளா மாநிலத்தை சேர்ந்த ரகுராம். இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் இளம்பரிதி (18). இவர் துபாயில் பிளஸ்-2 தேர்வு எழுதிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்தார்.

    மீனம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினரான சரோஜா என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று துபாயில் 12-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவு வந்தது. அதில் இளம்பரிதி பெயில் ஆகி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இளம்பருதியின் பெற்றோர் அவரை மீண்டும் துபாய்க்கு வரும்படி அழைத்தனர்.

    இதற்காக நேற்று சென்னை விமான நிலையம் சென்ற இளம்பரிதி திடீரென மாயமானார். இது குறித்து சரோஜாவின் புகாரின் அடிப்படையில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை தேடி வருகிறார்கள். அவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் எங்கேயாவது சென்று விட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×