search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெரியகுளத்தில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் உண்ணாவிரதம்
    X

    பெரியகுளத்தில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் உண்ணாவிரதம்

    பெரியகுளத்தில் போலீசாரை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் அளித்து 15 நாட்கள் ஆகியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே இதனை கண்டித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் நடைபெற்றது.

    100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×