என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப்பிள்ளைசாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    எல்லைப்பிள்ளைசாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

    எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மரிஜான் (வயது 45). இவருக்கு ஜோஸ்பின் (39) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    புதுவையில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வந்த ராஜேஷ் மரிஜான் அதில் நஷ்டம் ஏற்படவே இண்டர்நெட் சென்டரை மூடி விட்டு சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாட்களில் புதுவை வந்து மனைவி- மகன்களை பார்த்து விட்டு செல்வது வழக்கம். புதுவை வரும் போது ராஜேஷ் மரிஜான் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதுபோல் நேற்று வாக்களிக்க புதுவை வந்த ராஜேஷ் மரிஜான் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் வேதனை அடைந்த ராஜேஷ் மரிஜான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×