என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.4¾ லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்4 April 2019 5:44 PM GMT (Updated: 4 April 2019 5:44 PM GMT)
திருப்பத்தூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.4¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே சிங்கம்புணரி சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலரும், மண்டல துணை தாசில்தார் உமாமகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.4 லட்சம் இருந்தது. அந்த வேனில் பணத்தை கொண்டு வந்த காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த காளஸ்வரன், செந்தில் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி டோல்கேட் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரி மாணிக்கவாசகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ராயபுரத்தை சேர்ந்த முத்து என்பவரிடம் ரூ.70 ஆயிரம் இருந்தது. ஆனால் இதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதைதொடர்ந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story
×