என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது
    X

    சிவகங்கையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது

    சிவகங்கை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது.
    சிவகங்கை:

    சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்ட மன்றத் தொகுதிகள் மற்றும் மானாமதுரை (தனி) இடைத்தேர்தலுக்கும் விகிதாசார அடிப்படையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட பதிவான வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விகிதாசார அடிப்படையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட பதிவான வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தைபிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 452 எந்திரமும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 438 எந்திரமும், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு 456 இயந்திரமும், மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதிக்கு 421 எந்திரமும் மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 437 எந்திரமும். ஆக மொத்தம் 2204 பதிவான வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தை விகிதாசார அடிப்படையில் நான்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் லதா தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, வட்டாட்சியர்கள் உட்பட்ட அரசு அலுவலர்கள் பணி மேற்கொண்டனர். #tamilnews
    Next Story
    ×