என் மலர்
செய்திகள்

தேனி அருகே வீட்டு கதவை உடைத்து நகை கொள்ளை
தேனி:
தேனி அருகே பழனிசெட்டி பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் வனராஜ். இவரது மனைவி மின்னல்கொடி. இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், பிரேம்குமார் என்ற மருமகனும் கேரளாவில் உள்ள கண்ணூரில் உள்ளனர். மின்னல்கொடி கேராளவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று தனது சொந்த ஊரான போடிக்கு வந்த அவர் தனக்கு சொந்தமான ஏலத்தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவர் வீட்டை பூட்டி சென்றுள்ளார். பூட்டை உடைத்து அதை அறிந்த மர்மநபர்கள் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 82ஆயிரம் மதிப்புள்ள தங்கநகைகளை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின்னல் கொடிக்கு தகவல் கொடுத்தனர். திரும்பி வந்து பார்த்த மின்னல்கொடி நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மின்னல் கொடி பழனிசெட்டி பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தேனி புறவழிசாலை வனச்சரக அலுவலகத்தில் வனஅலு வலராக பணிபுரிபவர் கர்ணன் (வயது52). இவருடன் வனக்காவலர்கள் ரவி, காமு ஆகியோர் ரோந்து பணியில் வெளியில் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த மின்சாதன பொருட்கள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் மதிப்பு ரூபாய் 5250 ஆகும்.
இதுகுறித்து வன அலுவலர் கர்ணன் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






