என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் அருகே மன்சூர் அலிகானுக்கு வாக்கு சேகரித்த மகன்
    X

    நத்தம் அருகே மன்சூர் அலிகானுக்கு வாக்கு சேகரித்த மகன்

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு அவரது மகன் அவருக்கு வாக்கு சேகரித்தார். #mansooralikhan #naamtamilarkatchi

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர்கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்களோடு மக்களாக பழகி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

    திண்டுக்கல் அருகில் உள்ள நத்தம் சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமும், செந்துறை, சந்தைபேட்டை, மார்க்கெட்டுகளில் உள்ள வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார்.

    அவர் பொதுமக்களிடம் இயற்கைக்கு மாறான திட்டங்களை கொண்டுவரும் மத்திய மாநில அரசுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம். மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து நடந்தே சென்று பொதுமக்களிடம் ஜாலியாக பேசியபடி வாக்கு சேகரித்தார். என்னுடன் செல்பி எடுக்க நினைத்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் ஓட்டு மட்டும் எனக்கு போடுங்கள் என்றார். தொடர்ந்து அவரால் பேச முடியாததால் மன்சூர்அலிகானின் மகன் காஜாமீரான் தனது தந்தைக்காக வாக்கு கேட்டு பேசினார். #mansooralikhan #naamtamilarkatchi

    Next Story
    ×