என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கல்லூரி காதல் ஜோடி தஞ்சம்
  X

  திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கல்லூரி காதல் ஜோடி தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கல்லூரி காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

  திருவள்ளூர்:

  பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (21). இவர் பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட், இறுதியாண்டு படித்து வருகிறார்.

  இவரும் அதே கல்லூரியில் உடன்படிக்கும் புண்ணியம் கிராமத்தை சேர்ந்த சின்ராஸ்(22). என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

  இந்த காதல் விவகாரம் திலகவதி வீட்டில் தெரிய வந்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

  இதையடுத்து கடந்த 7-ந்தேதி திலகவதியும், சின்ராசும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை பாரிமுனையில் உள்ள பதிவு துறை அலுவலக்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

  பின்னர் இருவரும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

  அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தினார், அப்போது இருவிட்டாரின் பெற்றோர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

  Next Story
  ×