search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணுவாய் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவர் தற்கொலை
    X

    கணுவாய் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவர் தற்கொலை

    கோவை கணுவாய் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது 2-வது மகன் ஜெயசூர்யா (வயது 19). தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ., படித்து வந்தார்.

    ஜெயசூர்யாவும் ஒரு மாணவியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த ஒரு வாரமாக ஜெயசூர்யா விரக்தியில் இருந்தார். பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியாது.

    இந்நிலையில் வீட்டில் தனியே இருந்து ஜெயசூர்யா தாயின் சேலையில் தூக்குப்போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ஜெயசூர்யா தூக்கில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×