என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்தாதிரிப்பேட்டையில் கடையின் பூட்டை உடைத்து 40 செல்போன்கள் கொள்ளை
    X

    சிந்தாதிரிப்பேட்டையில் கடையின் பூட்டை உடைத்து 40 செல்போன்கள் கொள்ளை

    சிந்தாதிரிப்பேட்டையில் கடையின் பூட்டை உடைத்து 40 செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரகுமான். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 40 செல்போன்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து ரகுமான் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×