search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் இன்று 15 நிமிடம் விற்பனை நிறுத்தம்
    X

    தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் இன்று 15 நிமிடம் விற்பனை நிறுத்தம்

    நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்களும் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PulwamaAttack
    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி தாக்குதலில் 40 துணை ராணுவ படை வீரர்கள் பலியானார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் உயிர் இழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள இந்திய மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் அனைத்து பொது நல அமைப்புகள் சார்பாகவும் மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டன.

    தமிழ்நாடு பெட்ரோலியம் வணிகர்கள் சார்பில் கடந்த 16-ந்தேதி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 15 நிமிடங்கள் மூடப்பட்டன. இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,800 பெட்ரோல் பங்குகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்களும் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-



    தேசத்திற்காக 40 வீரர்கள் உயிர் இழந்துள்ள சம்பவம் நாட்டு மக்களை வேதனை அடைய செய்துள்ளது. உயிர் இழந்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்கும் வகையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோலிய பங்குகளிலும் விளக்குகளை அனைத்து விற்பனையை நிறுத்துகிறோம். 15 நிமிடங்கள் விற்பனை நடைபெறாது.

    அப்போது பங்குகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் பேனர் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack
    Next Story
    ×