என் மலர்

  செய்திகள்

  வள்ளியூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி
  X

  வள்ளியூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வள்ளியூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  நெல்லை:

  வள்ளியூர் அருகே உள்ள கேதைசேரியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது42), தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (35). சம்பவத்தன்று முத்து கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வள்ளியூரில் இருந்து கோதைசேரிக்கு சென்ற போது ஒரு திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் சறுக்கி கவிழ்ந்தது.

  இதில் பலத்த காயம் அடைந்த முத்துகிருஷ்ணனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். 

  இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×