என் மலர்

  செய்திகள்

  பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூருக்கு எடுத்து செல்ல தடை கேட்ட வழக்கு தள்ளுபடி
  X

  பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூருக்கு எடுத்து செல்ல தடை கேட்ட வழக்கு தள்ளுபடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூருக்கு எடுத்து செல்ல தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #VishnuStatue #MadrasHC
  சென்னை:

  சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ரத்தினம் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் 350 டன் எடை கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செய்யப்பட்டது.

  இந்த சிலை சாலை வழியாக மிகப்பெரிய லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்த சிலையின் எடை அதிகம் என்பதால், சாலைகள் சேதம் அடைகின்றன.

  சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைகின்றன. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த சிலையை கர்நாடகா மாநிலத்துக்கு எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு ஐகோர்ட்டில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிலையை கொண்டு செல்ல அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

  இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை சாலை வழியாக கொண்டு செல்வதால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் பாதிக்கப்படாத நபர் என்பதால், அவர் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #VishnuStatue #MadrasHC
  Next Story
  ×