என் மலர்
செய்திகள்

சோளிங்கரில் லாட்ஜில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
சோளிங்கரில் லாட்ஜில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. இன்று காலை இந்த லாட்ஜின் 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து தூர்நாற்றம் வீசியது.
லாட்ஜ் ஊழியர்கள் அந்த அறையின் கதவினை தட்டி திறக்க முயன்றுள்ளனர். ஆனால் உள்பக்கம் பூட்டி இருந்ததால் திறக்க முடியவில்லை.
இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவின் உள்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் கயிற்றில் தூக்கிட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலாஜா வன்னிவேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது 40). கூலி தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






