என் மலர்
செய்திகள்

வில்லியனூரில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவி மாயம்
வில்லியனூரில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவி மாயமானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் வி.மணவெளி கணபதிநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். 2 வீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார்.
இவரது மகள் சண்முக பிரியா (வயது 20). இவர் சென்னை தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் குடியரசு தின விடுமுறையில் வீட்டுக்கு வந்த சண்முக பிரியா நேற்று முன்தினம் மாலை தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறி உள்ளார். இதனால் அவரது தாய் மாத்திரை வாங்க மருந்து கடைக்கு சென்றார்.
மாத்திரை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, சண்முகபிரியாவை காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களில் தேடியும் எங்கும் சண்முகபிரியாவை காணவில்லை.
இதுகுறித்து சங்கர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஏட்டு கிருபாகரன் வழக்கு பதிவு செய்து சண்முகபிரியாவை தேடி வருகிறார்.

Next Story