என் மலர்

  செய்திகள்

  சென்னை- திருச்சி பஸ்சில் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ரூ.11½ லட்சம் பணம் அபேஸ்
  X

  சென்னை- திருச்சி பஸ்சில் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ரூ.11½ லட்சம் பணம் அபேஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை- திருச்சி பஸ்சில் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் இருந்து ரூ.11.5 லட்சம் பணத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  பெரம்பலூர்:

  திருச்சி இனாம்குளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 70க்கும் மேற்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று காலை திருச்சி வந்தடைந்தன.

  இந்தநிலையில் சிறப்பு பஸ்கள் மூலம் வசூலான பணம் ரூ.11½லட்சத்தை, பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை துணைமேலாளர் செந்தில் குமார் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிவக்குமார், ரகுபதி, ஆனந்தன், மணிமுருகன் ஆகியோர் ஒரு சூட்கேசில் எடுத்துக்கொண்டு திருச்சி மிளகுப்பாறையில் உள்ள கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு வந்தனர். அவர்கள் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் வராமல் மற்றொரு அரசு பஸ்சில் வந்தனர்.

  இன்று காலை பெரம்பலூர் பஸ் நிலையம் வந்ததும், டீ குடிப்பதற்காக பஸ்சில் இருந்து இறங்கி செல்ல முயன்றனர். அப்போது சூட்கேசை பார்த்த போது அதனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து பெரம்பலூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ரூ.11½ லட்சம் பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

  போக்குவரத்து கழக ஊழியர்கள் சென்னையில் இருந்து புறப்பட்ட போது வசூல் பணம் ரூ.11½ லட்சம் உள்ள சூட்கேசை பஸ்சின் லக்கேஜ்கள் வைக்கப்படும் பகுதியில் வைத்து விட்டு தூங்கியதாக தெரிகிறது. அவர்கள் பணம் எடுத்து செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி , வரும் வழியில் பணத்தை அபேஸ் செய்து சென்றுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கைவரிசையில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் இருந்து ரூ.11.½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
  Next Story
  ×