search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-சி 44 ராக்கெட் விண்ணில் நாளை ஏவப்படுகிறது
    X

    ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-சி 44 ராக்கெட் விண்ணில் நாளை ஏவப்படுகிறது

    பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. #PSLVC44 #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கை கோள்களை சுமந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

    இதற்கிடையே பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    ஹாம்ரேடியோ சேவைக்காக மாணவர்கள் தயார் செய்த சிறிய ரக கலாம் சாட் மற்றும் இஸ்ரோ தயாரித்த மைக்ரோசாட்- ஆர் ஆகிய 2 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி.-சி 44 ராக்கெட் சுமந்து செல்கிறது.

    4 நிலைகளை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 274.12 கி.மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்படுடுறது. இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் 46-வது ராக்கெட் ஆகும்.

    ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பி.எஸ்.எல்.வி.- சி343 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    அதில் வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் ஹைசிஸ் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. #PSLVC44 #ISRO
    Next Story
    ×