என் மலர்

  செய்திகள்

  பழைய கட்டிடத்தை இடித்த போது சுவர் விழுந்து தொழிலாளி பலி
  X

  பழைய கட்டிடத்தை இடித்த போது சுவர் விழுந்து தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை அருகே பழைய கட்டிடத்தை இடித்த போது சுவர் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதுச்சேரி:

  புதுவை ரங்கபிள்ளை வீதியில் பழைய வீடு ஒன்றை இடிக்கும் பணி நடந்து வருகிறது. கடலூரை சேர்ந்த ராஜா என்பவர் காண்டிராக்ட் எடுத்து அதை இடித்து வருகிறார்.

  அவரிடம் விக்கிரவாண்டி பம்பாதிரிபேட்டை சேர்ந்த சிங்காரம் (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் ஒரு பக்க சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

  அப்போது சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  ஆனால் சிகிச்சை பலனின்றி சிங்காரம் உயிரிழந்தார். இதுதொடர்பாக பெரியகடை போலீசார் காண்டிராக்டர் ராஜா, வீட்டு உரிமையாளர் ஹரிராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  இறந்த சிங்காரத்திற்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×