search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.140 கோடி செலவில் 555 புதிய பேருந்துகள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X

    ரூ.140 கோடி செலவில் 555 புதிய பேருந்துகள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழ்நாடு அரசு 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,678 பேருந்துகளை இயக்கி வருகிறது. சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநில மக்களும் பேருந்து சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 82 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 112 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 140 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 102 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகளும், என மொத்தம் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இதற்கான விழா சென்னை கோட்டையில் இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி. பாஸ்கரன், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalanisamy

    Next Story
    ×