search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டு: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
    X

    புத்தாண்டு: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். #edappadiPalanisamy #NewYear2019

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ‘‘எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே எனது அரசின் குறிக்கோள்” என்ற அம்மாவின் கனவினை நனவாக்கும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

    மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டி, மக்கள் வாழ்வு வளம்பெற தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, வளமும், வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

    இப்புத்தாண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #edappadiPalanisamy #NewYear2019

    Next Story
    ×