என் மலர்
செய்திகள்

காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் - விஜயபாஸ்கர்
காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #Vijayabaskar
சென்னை:
மாமல்லபுரத்தில் தமிழக தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து காசநோய் இல்லாத தமிழ்நாடு-2025 உருவாக்கும் கருத்தரங்கு நடைபெற்றது.
இதை துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரால் 2017 அக்டோபர் மாதம் காசநோய் இல்லாத சென்னை என்ற திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் நோயாளிகளை இல்லம் தேடி சென்று காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன துணைத் தலைமை இயக்குனர் சவும்யா சாமிநாதன், அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிக்கோல் சுகி, வீகாஷ் ஷீல் பங்கேற்று பேசினார்கள். #Vijayabaskar
Next Story






