search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராஜபாளையத்தில் ரவுடி கொலையில் நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    ராஜபாளையத்தில் ரவுடி கொலையில் நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

    ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது30), பிரபல ரவுடி. பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி என்பவரை கொன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி வந்த மகேஷ் மலைப்பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் மலையில் அவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை மகேசுடன் அவரது நண்பர் முகவூர் பூபேஸ் குப்தா நகரைச் சேர்ந்த வீரமணிகண்டன் (32) என்பவர் சுற்றி திரிந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    ஆனால் தற்போது வீரமணிகண்டன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் மகேசை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.

    Next Story
    ×