search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
    X

    பல்லடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    கோவை-திருப்பூரில் உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். #FarmersProtest
    பல்லடம்:

    தமிழகத்தில் விளை நிலங்களின் வழியாக மின் கோபுர பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் (திங்கட்கிழமை) 8 இடங்களில் விவசாயிகளின் காத்திருப்பு தொடர் போராட்டம் தொடங்கியது.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் தாராபுரம் சாலையில் உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் இன்று காலை 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி கூறியதாவது:-

    மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 12 உயர் மின் கோபுரங்கள் பாதை மின் திட்டங்கள் மூலம் 2.50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் விளை நிலங்களின் வழியாக மின் கோபுரங்களை நிறுவும் பணி மேற்கொண்டுள்ளது.

    தற்போது இப்பணியால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதித்துள்ளனர். கேரளாவில் சாலையோரம் கேபிள் வழியாகவும், அதேபோல் மதுரையிலிருந்து இலங்கையின் புது அனுராதாபுரத்திற்கும் கேபிள் வழியாகவும் மின்சாரம் கொண்டு செல்ல திட்டம் செயல்படுத்தவுள்ளனர். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இது போன்ற திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

    தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். கேரளாவில் உள்ளதை போல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்திலும் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டையில் கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில பொருளாளர் டாக்டர் தங்கராஜ் தலைமையில் இன்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. #FarmersProtest
    Next Story
    ×