search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
    X

    விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

    விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வல்லக்குளத்தைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 28). இவருக்கும், விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் வைதேகி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக 10 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டனர். அதனை தாய் வீட்டில் இருந்து வாங்கிக் கொடுத்தேன்.

    கடந்த 2013-ம் ஆண்டு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்தேன். அப்போது எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க இதுவரை கணவர் வரவில்லை.

    இது குறித்து கேட்டால் ரூ.50 ஆயிரம் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கணவர் கூறினார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் சீனிவாசன்-ராஜேஸ்வரி, மைத்துனர் ஜெயக்குமார் ஆகியோர் உடந்தையாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் செந்தில்குமார் உள்பட 4 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×