search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே பால் கேன்களில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது
    X

    போடி அருகே பால் கேன்களில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது

    போடி அருகே பால் கேன்களில் நூதனமுறையில் ரேசன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேசன் அரிசிகளை கடத்தி கேரளாவிற்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைச்சாலையில் வாகனங்கள் மூலமாகவும். கூலி வேலைக்குச்செல்லும் பெண்கள் தலைச்சுமையாகவும் எடுத்துச்சென்று அரிசி கடத்தப்பட்டது.

    போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரின் தீவிர சோதனையால் இது ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அடிக்கடி அரிசி கடத்தல் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பால் கேன்களில் அரிசி கடத்தி வருவதாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வள்ளுவர் சிலை அருகே பைக்கில் வந்த அவரை மடக்கிப்பிடித்து 8 கேன்களில் இருந்த 500 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் வாலிபரையும் போலீசில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×