என் மலர்

  செய்திகள்

  மீட்பு நடவடிக்கை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்
  X

  மீட்பு நடவடிக்கை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் கேட்டுக்கொண்டார். #CycloneGaja #ReliefOperation #RBUdhayakumar
  சென்னை:

  டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் மீட்பு நடவடிக்கை திருப்தி இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

  இந்நிலையில் அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் உதயகுமார், தந்தி டிவிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப அரசு செயல்பட்டு வருகிறது. புயல் பாதிப்பால் உயிரிழப்புகளை தடுக்க, மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் அரசு கொண்டு வந்தது.

  பேரிடர் நேரத்தில் விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்; மீட்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுவதால் அதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சோர்வு ஏற்படும். எனவே, மீட்பு நடவடிக்கை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.  குக்கிராமங்களிலும் கூட மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; 100% முழுமையாக நிறைவேற்ற, அரசுக்கு அவகாசம் தேவை. விழுந்த மின்கம்பங்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைப்பதே அரசின் முதல் பணி ஆகும்.

  சிலர் திட்டமிட்டு அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள்; இது நிவாரண பணியில் தொய்வை ஏற்படுத்தும். அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பதாக கூறப்படுவது தவறு; சாமானிய மக்களை போராட சிலர் துண்டிவிடுகிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #ReliefOperation #RBUdhayakumar
  Next Story
  ×