என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்தில் சொத்து தகராறில் தந்தையை தாக்கிய டிரைவர் கைது
Byமாலை மலர்18 Nov 2018 10:20 PM IST (Updated: 18 Nov 2018 10:20 PM IST)
நாசரேத்தில் சொத்து தகராறில் தந்தையை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் ஏதேன் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஜோசப் எட்வர்டுராஜ் (வயது 50) டிரைவர். இவருக்கு திருமணமாகி தூத்துக்குடி பிறமுத்துவிளையில் தனியாக வசித்து வருகிறார். இவர் தந்தை வீட்டிற்கு அடிக்கடி சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஜோசப் எட்வர்டுராஜ் நாசரேத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜோசப் எட்வர்டுராஜ், செல்லத்துரையை அடித்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ஜோசப் எட்வர்டுராஜை கைது செய்தார்.
Next Story
×