search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளை சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை
    X

    பாளை சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை

    பாளை சிறையில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
    நெல்லை:

    பாளை மத்திய ஜெயிலில் 1,300-க்கும் அதிகமான தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு முன்பு கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டதால் பல்வேறு பிளாக்குகளாக பிரித்து கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மத்திய ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளதா என்றும் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்துவார்கள். அதுபோல இன்று பாளை மத்திய ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்திர குமார் ரத்தோட் உத்தரவிட்டார்.

    துணை கமி‌ஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் பாளை உதவி கமி‌ஷனர் சக்கரவர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் காளியப்பன், தில்லை நாகராஜன் மற்றும் 70-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்திய ஜெயிலுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள்.

    7 பிரிவுகளாக பிரிந்து சென்ற அவர்கள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், குளியலறைகள், சமையலறை, மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினார்கள். சந்தேகப்பட்ட தரை பகுதிகளில் தோண்டி பார்த்தும் சோதனை நடந்தது.

    போதை பொருட்கள், செல்போன் போன்றவைகள் ஏதேனும் உள்ளதா? என்று சில கைதிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இன்று காலை 7.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    சோதனையின் போது பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் ஜெயில் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

    Next Story
    ×