என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆலோசனை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. #ADMK #EdappadiPalaniswami
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வ்ம ஆகியோர் இன்று காலை திடீர் என்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் வந்தனர்.
அவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரனை ஆதரிப்பவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அழைப்பு விடுத்து இருந்தனர்.
அதுபற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தினகரன் ஆதரவாளர்கள் 18 தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது அப்பீல் செய்வதா? என்று ஆலோசித்து வருகிறார்கள். இதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. #ADMK #EdappadiPalaniswami
Next Story






