என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் 455 பணியாளர்கள்- கலெக்டர் தகவல்
    X

    நாகை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் 455 பணியாளர்கள்- கலெக்டர் தகவல்

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளதா என கண்டுபிடிக்கும் மையங்கள் நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகள் மற்றும் அரசு மருத்துமனைகளில் காய்ச்சல் கண்டோருக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்படுகிறது. மொத்தம் 455 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கொசு புழு ஒழிப்பு மருந்து டெமி பாஸ்-1700 லிட்டர், புகை அடிக்கும் மருந்து-1100 லிட்டர், புகை அடிக்கும் கருவி -199 இருப்பு உள்ளது. மேற்பார்வை பணிக்காக 75 சுகாதார ஆய்வாளர்கள், 11 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் மற்றும் உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், வீட்டு உபயோத்திற்காக சேமித்து வைத்திருக்கும் குடிநீர் பானைகளை நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி அளிக்கப்படுகிறது. மேலும் விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்கடி மருந்து, பாம்புகடி மருந்து போன்றவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக் காலங்களில் தொற்று நோய் ஏற்படாமல் இருப்பதற்கு குடிநீரை காய்ச்சி குடீப்பதன் மூலமாகவும், நம்மையும் நம்மை சார்ந்துள்ளவர்களையும் சுத்தமாகவம் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதன் அவசியத்தை பிறருக்கும் எடுத்துக்கூறுவதன் மூலம் நோய்களை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.

    Next Story
    ×