search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிவு

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். #Hogenakkal

    Next Story
    ×