என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
    X

    திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

    திருமங்கலம் அருகே காவலாளியை தாக்கி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் திருடிய கும்பலை தேடி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே சுங்குராம்பட்டியை அடுத்து விமான நிலைய ரோட்டில் உள்ளது புளியங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையை பணியாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர். அங்கு காவலாளியாக சுப்பிரமணியம் என்பவர் இருந்தார்.

    நள்ளிரவு டாஸ்மாக் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது. அந்த கும்பல் திடீரென்று காவலாளி சுப்பிரமணியத்தை ஆயுதங்களை காட்டி மிரட்டியதுடன் தாக்கினர். பின்னர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், கடையினுள் வைக்கப்பட்டிருந்த 24 மதுபாட்டில் பெட்டிகளை திருடிக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் திருடிய கும்பலை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×