என் மலர்

  செய்திகள்

  கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதி- 37 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
  X

  கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதி- 37 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸ் காய்ச்சலுக்கு 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
  கோவை:

  கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

  காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  இந்த கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறை சார்பில் பாலமநல்லூர் கிராமத்துக்கு மருத்துவ குழு அனுப்பபட்டது.

  மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 30 துப்புறவு பணியாளர்கள் மூலமாக கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு கரூரை சேர்ந்த 69 வயது முதியவர், ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுமி ஆகிய 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  வைரஸ் காய்ச்சலுக்கு 35 பேரும் என மொத்தம் 37 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினசரி ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

  தொடர்ந்து காய்ச்சல் ,சளி,இருமலுடன் இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இவர்களின் யாருக்காவது, டெங்கு, பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #swineflu
  Next Story
  ×