search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் திடீர் மழை- வியாபாரிகள் கவலை
    X

    புதுவையில் திடீர் மழை- வியாபாரிகள் கவலை

    புதுவையில் இன்று பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவையில் வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெரியளவில் மழை பெய்யவில்லை. அதற்கு பதிலாக கோடை காலம் போல தகிக்கும் வெப்பம் நிலவியது. இதனால் அக்டோபர் மாதத்தில் பெரிதாக மழை பெய்யும் என மக்கள் நம்பி இருந்தனர்.

    இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் 2 நாட்கள் கடுமையான மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு அரசு விடுமுறையும் அறிவித்தது.

    இந்த மழை தொடரும் என அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தது. ஒத்திகையும் நடத்தி னர். ஆனால், மழை பெய்ய வில்லை. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. மழை பெய்வதற்கான சூழலும் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதுவையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    இன்று காலை 10 மணிக்கு மேல் புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    தீபாவளி பண்டிகைக்கு 2 வாரம் மட்டுமே உள்ள நிலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியுள்ளது வியாபாரிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மழையினால் மக்கள் வெளிவர மாட்டார்கள். வார இறுதிநாட்களில்தான் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் வருவார்கள். ஆனால், இன்று மழையின் காரணமாக மக்கள் நடமாட்டம் புதுவையில் குறைந்தது.

    இதேநிலை நீடித்தால் தீபாவளி வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கும் என வியாபாரிகள் கலக்க மடைந்துள்ளனர்.

    Next Story
    ×