search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் சோதனை
    X

    ராஜபாளையம் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் சோதனை

    ராஜபாளையம் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ராஜபாளையம்:

    உர வினியோகத்தை முறைப்படுத்தவும், முனைய கருவி மூலம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை சோதனை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும், தரக் கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் 3 முதல் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த குழுவினரும் வெவ்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சேத்தூர், தளவாய்புரம், முகவூர், அய்யனாபுரம், சமுசிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 37 இடங்களில் விவசாயத்திற்கு தேவையான உரம் விற்பனை செய்யப்படுகிறது.இதில் 4 மொத்த விற்பனை நிலையங்கள், 12 தொடக் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் அடங்கும்.

    இங்கிருந்து உரம் வாங்கும் விவசாயிகளுக்கு, அரசு அளித்துள்ள விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே ரசீது வழங்க வேண்டும். இந்த முறை சரியாக பின்பற்றப் படுகிறதா? என திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    8 அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ராஜபாளையம், தென்காசி சாலையில் உள்ள உரக் கடைகள் மற்றும் உரம் மொத்தமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த குடோன்களில் ஆய்வு செய்தனர்.

    உரக் கடைகளில் உள்ள விற்பனை உரிமம், விற்பனையில் முனைய கருவி மூலம் ரசீது வழங்கப்படுகிறதா? அரசு நிர்ணயித்த விலையில் உரம் விற்பனை செய்யப்படுகிறதா? தராசு முத்திரையிடப்பட்டுள்ளதா? உரங்கள் சரியான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? இருப்பு பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

    Next Story
    ×