என் மலர்

  செய்திகள்

  அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி - எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பங்கேற்பு
  X

  அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி - எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
  சென்னை:

  அ.தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதையடுத்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

  ஸ்மார்ட் கார்டாக உருவாக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர்.

  இதில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இருவரும் அவர்களது உறுப்பினர் அட்டையை ஒருவரிடமிருந்து ஒருவர் பெற்றுக் கொண்டனர். பின்னர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் புதிதாக சேர்ந்தவர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன.

  ஸ்மார்ட் உறுப்பினர் அடையாள அட்டையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டையில் பார்கோடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் உறுப்பினரின் முழு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
  Next Story
  ×