என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை கோர்ட்டில் விஷம் குடித்த இரவு காவலர் கைது
Byமாலை மலர்10 Oct 2018 11:04 AM GMT (Updated: 10 Oct 2018 11:04 AM GMT)
திருவண்ணாமலை கோர்ட்டில் இரவு பணியில் இருந்த காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
கலசபாக்கம் அருகே பத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 29). இவர் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவு காவலராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
திருமணமாகி சில மாதங்கள் தான் ஆவதால் தன்னை மீண்டும் திருவண்ணாமலை கோர்ட்டுக்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி திருவண்ணாமலை கோர்ட்டுக்கு வந்த கிருஷ்ணன், திடீரென பூச்சிமருந்து (விஷம்) குடித்து கோர்ட்டு வளாகத்தில் மயங்கி விழுந்தார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Next Story
×