என் மலர்

  செய்திகள்

  தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக 12 நதிகளின் புனிதநீர் நெல்லை வருகிறது
  X

  தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக 12 நதிகளின் புனிதநீர் நெல்லை வருகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக விஷ்வ இந்து பரி‌ஷத் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் நெல்லை வருகிறது.
  நெல்லை:

  தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக விஷ்வ இந்து பரி‌ஷத் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டது.

  இந்த நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு 12 ரதங்களில் வைத்து முக்கிய மாவட்டங்களில் பொது மக்கள் சிறப்பு பூஜைக்காக சுற்றி வந்தது. இந்த ரதம் இன்று மாலை சங்கர் நகர் கொண்டு வரப்படுகிறது. அங்கு பா.ஜ.க., மடாதிபதிகள், புஷ்கர விழா குழுவினர் வரவேற்கின்றனர்.

  பின்னர் இது நெல்லை, பாளை மாநகர் முழுவதும் சுற்றி வருகிறது. இதனை தொடர்ந்து நாளை காலை பாபநாசம் கொண்டு செல்லப்பட்டு புனிதநீரை தாமிரபரணி ஆற்றில் விட்டு அபிஷேகம் செய்கின்றனர்.
  Next Story
  ×