என் மலர்
செய்திகள்

அன்புச்செல்வம்
திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு
திருமங்கலம் அருகே என்ஜினீயரிங் மாணவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அன்புச்செல்வம் (வயது19). நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்த அன்புச்செல்வம் இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் கப்பலூர் ரெயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் அன்புச்செல்வம் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மாணவர் அன்புச்செல்வம் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story