என் மலர்

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக சரிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இதனால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×