என் மலர்

  செய்திகள்

  நெல்லையில் பரவலாக மழை - அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து
  X

  நெல்லையில் பரவலாக மழை - அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக பாபநாசம் அணை, குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
  நெல்லை:

  நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

  ராதாபுரம் கடற்கரை பகுதியிலும், பாளை நகர் பகுதிகளிலும் அதிகளவு மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக நாங்குநேரி பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சிவகிரி பகுதியில் 20 மில்லி மீட்டரும், பாளையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை இல்லாவிட்டாலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. சேர்வலாறு மலைப் பகுதியில் 8 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

  பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 285.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வரும் 604 கன அடி தண்ணீர் அப்படியே பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக உள்ளது.

  மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 13 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது.

  இதுபோல கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கும் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது. இன்று காலை அணைகளின் நீர்மட்டம் கடனாநதி-63.10, ராமநதி -47.25, கருப்பாநதி-57.66, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பி யாறு-19.94, கொடு முடியாறு-32.50, அடவிநயினார்-86 அடிகளாக உள்ளது.

  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மெயினருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் இதமாக கொட்டுகிறது.

  தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

  நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

  நாங்குநேரி-31, சிவகிரி-20, கருப்பாநதி-16, பாளையங்கோட்டை-12.4, அடவிநயினார்-11, சேர்வலாறு-8, செங்கோட்டை-6, சேரன்மகாதேவி-4.4, கடனாநதி-4, தென் காசி-3, சங்கரன் கோவில்-3, ஆய்க்குடி-2.8, நெல்லை-2.7, ராமநதி-2, மணிமுத்தாறு-1.2, குண்டாறு-1.
  Next Story
  ×