என் மலர்

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 13,000 கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 13,000 கனஅடியாக சரிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழி யாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×