என் மலர்
செய்திகள்

தாராபுரத்தில் பாத்திரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
தாராபுரத்தில் பாத்திரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #robbery
தாராபுரம்:
தாராபுரம் விட்டல் பாய் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் மேற்கு பஜனை மடத்தெருவில் பாத்திர மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டுச்சென்றார்.
இன்று மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம் திருட்டுபோனது தெரியவந்தது.
இது குறித்து அவர் தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story