search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் ரூ.60 ஆக உயருகிறது
    X

    சென்னை விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் ரூ.60 ஆக உயருகிறது

    சென்னை விமான நிலையத்துக்கு கார்களில் வரும் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.40 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.60 ஆக உயர்த்தப்படுகிறது. #ChennaiAirport
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடுகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் விமானங்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    விமான நிலையத்துக்கு கார்களில் வரும் பயணிகளுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.40 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.60 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் 3 நிமிடங்கள் மட்டுமே பயணிகளை இறக்கி விட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:-

    சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்க ரூ.2,467 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதன்மூலம் அடுக்கு கார் நிறுத்தம், விமான தளத்தின் திறன் அதிகரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    பயணிகள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெறும். இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் 186 விமானங்களை நிறுத்த முடியும்.


    விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக உள்ளூர் விமான நிலையம் அருகில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    விமான நிலைய கார் பார்க்கிங் கட்டணம் ரூ.60 ஆக உயர்த்தப்படுகிறது. கார்களில் வரும் பயணிகளை இறக்கிவிட 3 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். ‘டூவீலர்’ களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiAirport
    Next Story
    ×